புதன், 27 ஜூலை, 2011

யாழ்.மாவட்டத்தில் இளவயதுக் கர்ப்பங்கள்

யாழ்.மாவட்டத்தில் வருடந்தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள் மற்றும் 300 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக சுகாதார பணிமனையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

சமூக சீர்திருத்த குறுந்திரைப்பட விழா சேர் பொன்.இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றபோது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையில் யாழ்.மாவட்டத் தில் 27 ஆயிரம் விதவைகள் உள்ளனர்.

இதில் யுத்தம் காரணமாக கணவனை இழந்தவர்களும் இயற்கை மரணத்தில் கணவனை இழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் குடும்பத் தலைமைத்துவப் பொறுப்பு வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். மேலும், பெண்கள், சிறுவர்கள் என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்தால் உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களேயாவர். நாள் ஒன்றுக்கு உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் எனப் பதிவாகி உள்ளனர்.

அங்கவீனம் என்பதும் ஒரு வகையில் உளரீதியான பாதிப்புத்தான். அத்துடன், ஒருமாதத்தில் 60 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுகின்றனர்.

இவை யாவற்றுக்கும் காரணம் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைதான்.அண்மைக் காலமாக கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், இவற்றில் பெற்றோர்களின் பங்கும் உள்ளடங்குகிறது.

தமது பிள்ளைகள் எங்கு செல்கின்றனர், யாருடன் உரையாடுகின்றனர் என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர்களுடையது.

சில பெற்றோர்கள் அந்தப் பொறுப்பைப் பெற்றுக் கொள்ளத் தவறி விடுகின்றனர்.கல்வி அறிவுள்ள பெற்றோர்கள் மத்தியில் இவ்வாறான பிரச்சினைகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தின் மத்தியில் இவை ஆராயப்பட வேண்டும். இவையாவற் றுக்கும் தீர்வுகள் பெற்றோர் மத்தியில் உண்டு. அதுமட்டுமல்ல முன்னாள் போராளிகள் என இனங்காணப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் சமுதாயத்துடன் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும். இவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்விடங்கள் ஆகியவற்றை இந்தச் சமுதாயம் தான் வழங்க வேண்டும்.

வலுவிழந்தோர்கள், உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை சமூகம் மதிக்க வேண்டும். சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.ஒருபுறம் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றவாறு உள்ளன.

கொலைகள், கொள்ளைகள் என்பவற்றுக்கு வறுமை ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இவர்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தா

திங்கள், 25 ஜூலை, 2011

விரைவில் செய்திகள்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host