
யாழ்.மாவட்டத்தில் வருடந்தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள் மற்றும் 300 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாவதாக சுகாதார பணிமனையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
சமூக சீர்திருத்த குறுந்திரைப்பட விழா சேர் பொன்.இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றபோது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போதைய கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையில் யாழ்.மாவட்டத் தில் 27 ஆயிரம் விதவைகள் உள்ளனர்.
இதில் யுத்தம் காரணமாக கணவனை இழந்தவர்களும் இயற்கை மரணத்தில் கணவனை இழந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் குடும்பத் தலைமைத்துவப் பொறுப்பு வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். மேலும், பெண்கள், சிறுவர்கள் என்ற அடிப்படையில் மதிப்பீடு...